கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி, உடுத்துறை பகுதியில் 2024 மார்ச் மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை முகாமில் கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிஸார் இணைந்து உடுத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. குறித்த வீட்டின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்றில் (01) பொதி செய்யப்பட்ட 01 கிலோ 997 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த வீட்டின் உரிமையாளர் (01) கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சாவின் மதிப்பிடப்பட்ட தெரு மதிப்பு சுமார் 798,800.00 ரூபாய் என நம்பப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உடுத்துறை வடக்கைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் கேரள கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.