சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த 1177 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 04 சந்தேகநபர்கள் புத்தளம் சின்னபாடு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

புத்தளம், சின்னபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இன்று (13 பெப்ரவரி 2024) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த ஆயிரத்து நூற்று எழுபத்தேழு (1177) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றி ஐம்பது (150) பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களுடன் நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கி படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் மற்றும் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இன்று ( 2024 பிப்ரவரி 13) புத்தளம், சின்னபாடு கடற்பரப்பில், இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் விரைவு நடவடிக்கைகள் படகுகள் படையணியின் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த இரண்டு படகுகள் சோதனை செய்யப்பட்டது. அங்கு, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த நாற்பத்தொரு (41) பைகளில் அடைக்கப்பட்ட ஆயிரத்து நூற்று எழுபத்தேழு கிலோ அறுநூறு கிராம் (1177 கிலோ 600 கிராம்) பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றி ஐம்பது (150) பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 42 வயதுக்கு இடைப்பட்ட கல்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் ஆயிரத்து நூற்று எழுபத்தேழு கிலோ அறுநூறு கிராம் (1177 கிலோ 600 கிராம்) பீடி இலைகள் (ஈரமான எடை), சுமார் நூற்று ஐம்பது (150) பூச்சிக்கொல்லி போத்தல்கள் மற்றும் நான்கு (04) சந்தேகநபர்கள் மேலதிக சட்ட சடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.