வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 06 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், கல்முனை துடுவ கடல் பகுதியில் இன்று (2024 பிப்ரவரி 12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த ஆறு (06) பேர், சுமார் 774 கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைது செய்யப்பட்டன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் கல்முனை துடுவ கடற்படை பிரிவினரால் இன்று (2024 பிப்ரவரி 12,) சிறிய கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவ்டிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டது. அங்கு செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி குறித்த கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த ஆறு (06) பேருடன் எழுநூற்று எழுபத்து நான்கு (774) கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் டிங்கி படகொன்று கைது செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 24 முதல் 49 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த ஆறு (06) சந்தேகநபர்கள், கடல்அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.