சட்டவிரோதமான முறையில் சங்குகள் பிடித்த 03 பேர் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது
கல்பிட்டி இப்பண்தீவு கடல் பகுதியில் 2024 ஜனவரி 25 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரம்பு இல்லாத 1856 சங்குகளுடன் மூன்று சந்தேகநபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது.
அதன்படி, 2024 ஜனவரி 25 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினரால் கல்பிட்டி இப்பண்தீவு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்று குறித்த கடற்பகுதியில் அவதானிக்கப்பட்டது. அங்கு, அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரம்பு இல்லாத சுமார் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறு (1856) சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த டிங்கி படகு (01) மற்றும் மூன்று சந்தேக நபர்கள் (03) கைது செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 12 மற்றும் 48 வயதுடைய கல்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள் (03), சங்குகள் மற்றும் டிங்கி படகு (01) ஆகிய மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.