1626 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 65 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
தேவுந்தர முனையிலிருந்து சுமார் 100 கடல் மைல் (சுமார் 185 கி.மீ) தொலைவில் உள்ள தெற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 65 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கொண்ட (பொதி எடையுடன்) இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்லொன்று (01) மற்றும் அதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றும் பதினொரு (11) சந்தேக நபர்களும் இன்று (2024 ஜனவரி 20) கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் தேசிய இலட்சியத்தை அடைவதற்காக, நாசட்டின் கடற்பரப்பை உள்ளடக்கி ஊடுருவல் நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வரும் கடற்படையினர், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும், புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து, தெவுந்தர முனையிலிருந்து சுமார் 100 கடல் மைல் (சுமார் 185 கிலோமீற்றர்) தொலைவில் உள்ள தென் கடற்பரப்பில் இன்று (2024 ஜனவரி 19) காலை மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று சோதனை செய்யப்பட்டது. அங்கு, மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 கிலோ 076 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று (03) பைகள், குறித்த பல நாள் மீன்பிடிக் கப்பல் (01) மற்றும் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஆறு (06) சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் படி இரண்டு (02) பல நாள் மீன்பிடி கப்பல்கள், பதினொரு (11) சந்தேக நபர்கள் மற்றும் 65 கிலோ 076 கிராம் போதைப்பொருள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. இன்று காலை (2024 ஜனவரி 20,) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த போதைப்பொருள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் மொத்த வீதிப் பெறுமதி 1626 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தறை, கந்தர மற்றும் தேவுந்தர பிரதேசங்களில் வசிக்கும் 28 மற்றும் 52 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட 65,076 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் (பொதி எடையுடன்), பதினொரு (11) சந்தேகநபர்கள் மற்றும் இரண்டு பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருட்களைக் கையாள்வதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின் மட்டும் 4800 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கை என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஏனைய சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளும்.