சட்டவிரோதமாக 14,163 சங்குகளை வைத்திருந்த மூவர் (03) மன்னாரில் கைது
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து 2024 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி மன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் பதினான்காயிரத்து நூற்று அறுபத்து மூன்று (14163) சங்குகளை வைத்திருந்த மூவர் (03) கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, மன்னார் பொலிஸ் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2024 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா மற்றும் புஸ்ஸதேவ நிருவனங்களின் கடற்படையினர் மன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மிமீ சுற்றளவுக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரம்பு இல்லாத பதினான்காயிரத்து நூற்று அறுபத்து மூன்று (14163) சங்குகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு பென் (01) கைது செய்யப்பட்டனர்.
இதன் நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், மன்னார், ஏத்தாளை, இருக்கலம்பிட்டி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள் மற்றும் சங்குகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.