காலி தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது
காலி, தொடம்கொட பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே உள்ள தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் 2023 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
சீரற்ற காலநிலையால் இலங்கைக்கு பெய்து வரும் கனமழை காரணமாக கிங் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள், மரக்குற்றிகள், மூங்கில் புதர்கள் மற்றும் பிற குப்பைகள் கிங் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களின் கீழ் சேகரிக்கப்பட்டு, ஆற்றின் நீரின் சீரான ஓட்டத்திற்கு இடையூறாக உள்ளது. இதை குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் பாலத்தின் அடியில் இருந்த அடைப்பை அகற்றி அப்பகுதியில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தவிர்த்துள்ளனர்.
இதன்படி, தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற தெற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட சுழியோடி மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டது. அதன் படி கடற்படையினரால் சீரான முறையில் தண்ணீரை வெளியேற்றப்பட்டது.