13 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரைப் பகுதியில் 2024 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பத்தி நான்கு (34) கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
அதன்படி, 2024 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் புங்குடுதீவு இருப்பிட்டி கடற்கரைப் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கோடைம்பர நிறுவகத்தின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியிலுள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினாறு (16) பார்சல்களில் அடைக்கப்பட்ட முப்பத்தி நான்கு (34) கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி பதின்மூன்று (13) மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது, மேலும் குறித்த கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.