யாழ்ப்பாணம், வன்கலவாடி கடற்கரைப் பகுதியில் 02 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கைக் கடற்படையினர் 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் வங்கலவாடி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஆறு (06) கிலோகிராம் (ஈரமான எடை) அளவிலான கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

அதன்படி, வடக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் எலார நிறுவனத்திற்குச் சொந்தமான நயினாதீவு கடற்படைப் பிரிவின் கடற்படையினரால் 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் வங்கலவாடி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கரையோரப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மூன்று (03) பார்சல்களில் அடைக்கப்பட்ட ஆறு (06) கிலோ நாற்பது (40) கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி இரண்டு (02) மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது, மேலும் குறித்த கேரள கஞ்சா கையிருப்பு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.