வடமேற்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பத்தலங்குண்டுவ மற்றும் உச்சமுனே கடற்பரப்பில் 2023 டிசம்பர் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் மூன்று (03) டிங்கி படகுகள், 1995 கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 டிசம்பர் 19 ஆம் திகதி வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் செட்ரிக் கப்பலொன்று மற்றும் கரையோர ரோந்துப் படகொன்று பயன்படுத்தி கல்பிட்டி, பத்தலங்குண்டுவ மற்றும் உச்சமுனே கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொது சந்தேகத்திற்கிடமான 03 டிங்கி படகுகளை அவதானித்து சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு சட்டவிரோதமான இரவு சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எட்டு (08) பேர் மற்றும் சுமார் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐந்து (1995) கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் மூன்று (03) டிங்கி படகுகள் கைது செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 முதல் 56 வயதுக்கு இடைப்பட்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு பேர் (08), மூன்று டிங்கி படகுகள் (03), கடல் அட்டைகள் மற்றும் நீர்மூழ்கி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.