சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன
கல்பிட்டி, இப்பன்தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 2023 நவம்பர் 22 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்த நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2023 நவம்பர் 22 ஆம் திகதி இரவு கல்பிட்டி, இப்பண்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த சந்தேகத்திற்கிடமான 14 சாக்கு மூட்டைகள் அவதானித்து சோதனையிடப்பட்டன. அங்கு, அந்த சாக்கு மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடத்தல்காரர்களால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.