4500 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 219 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினரால் கைது
அரச புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த உளவுத் தகவலின்படி, இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகு கப்பலின் கடற்படையினரால் சுமார் 292 கடல் மைல் (சுமார் 540 கி.மீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது 4500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வீதிப் பெறுமதியான (பொதி எடையுடன்) 219 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள் கைது செய்தனர். இன்று (24 அக்டோபர் 2023) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த போதைப்பொருளை நேரில் பார்வையிடுவதற்காக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர்.
அதன்படி, அரச புலனாய்வுப் பிரிவினர் கடற்படைப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய புலனாய்வுத் தகவலின்படி, 2023 ஒக்டோபர் 19ஆம் திகதி விஜயபாகு கப்பல் மூலம் தெவுந்தரவிற்கு தெற்கே சுமார் 292 கடல் மைல் (சுமார் 540 கி.மீ) தொலைவில் ஆழ்கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த கடற்பகுதியில் இரவு நேரத்தில் பயணித்து கொண்டிருந்த இந்த சந்தேகத்திற்கிடமான உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலை பரிசோதித்த கடற்படையினர் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் ஒன்பது (09) பைகளுடன் இந்த மீன்பிடிக் கப்பலை கைது செய்தனர்.
இன்று (2023 அக்டோபர் 24) காலை சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகை கரைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, 09 சாக்குகளில் இருந்த சுமார் 219 கிலோ 634 கிராம் எடையுள்ள 200 ஹெரோயின் பொதிளை (பொதிகள் உட்பட) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், போதைப் பொருள் ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த சந்தேக நபர்களும் இவ்வாரு கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட 219 கிலோ 634 கிராம் ஹெரோயினின் மொத்த வீதி பெறுமதி 4500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குடாவெல்ல, திஸ்ஸமஹாராம, கோட்டகொட மற்றும் மாமடல பிரதேசங்களைச் சேர்ந்த 30 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், 219 கிலோ 634 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இதேவேளை, கடற்படைத் தளபதி இன்று (2023 ஒக்டோபர் 24) இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவிற்கு விஜயம் செய்து, அண்மையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதில் ஈடுபட்ட கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். போதைப்பொருள் ஒழிப்புப் பணியின் அவர்கள் செய்த பங்களிப்பிற்காக அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழித்தல் என்ற தேசிய இலட்சியத்தை அடைவதற்காக, கௌரவ ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் தேசிய நோக்கத்தை அடைவதற்காக, ஒரு பொதுவான இலக்கை நோக்கி. அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இத்தகைய வெற்றிகரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படையால் முடிந்தது.
மீன்பிடி நடவடிக்கை என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஏனைய சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளும்.