கல்பிட்டி மற்றும் புத்தளம் தடாகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2023 ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் புத்தளம் கல்பிட்டி உச்சமுனிய தடாகப் பகுதியில் மற்றும் புத்தலம் சேரக்குளிய தடாகப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி இரவு நேர சுழியோடி மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேருடன் இரண்டு டிங்கி படகுகள், 740 கடல் அட்டைகள், சுழியோடி உபகரனங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரனங்கள் கைது செய்தனர்.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இலங்கை கடற்படையின் வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் 2023 ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில், கல்பிட்டி தடாகத்தின் உச்சமுனிய பகுதியிலும், புத்தளம் சேராக்குளிய பிரதேசத்திலும் சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) படகுகள் சோதனை செய்தனர். அங்கு செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவு நேர சுழியோடி மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேருடன் எழுநூற்று நாற்பது (740) கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களுடன் இரண்டு (02) படகுகளும் கைப்பற்றப்பட்டன
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 38 வயதுக்கு இடைப்பட்ட கல்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து (05) பேர், இரண்டு (02) டிங்கி படகுகள், எழுநூற்று நாற்பது கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மீன்பிடி பரிசோதகர் மற்றும் புத்தளம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.