வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம்
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2023 ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் தென் மாகாணத்தின் மாத்தறை, அக்குரஸ்ஸ, திஹகொட மற்றும் கம்புறுப்பிட்டிய பிரதேசங்களுக்கு கடற்படையின் நிவாரணக் குழுக்களை அனுப்ப கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இப்போது கடற்படையின் நிவாரணக் குழுக்கள் அப் பகுதி பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வருகின்றனர்.
அதன்படி, 2023 ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் நில்வலா ஆறு மற்றும் கிரம்ப ஆற பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடற்படை நிவாரணக் குழுவினர் டிங்கி படகுகள் மூலம் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கினர்.
மேலும், தீவை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான கூடுதல் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.