வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் வழங்கப்பட்டன
இலங்கைக்கு பாதித்த மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2023 செப்டெம்பர் 28 ஆம் திகதி முதல் தெற்கு மாகாணத்தின் அகுரெஸ்ஸ, அத்துரலிய, தவலம மற்றும் கம்புறுப்பிட்டிய பிரதேசங்களுக்கு கடற்படை நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை ஏற்பாடு செய்துள்ளதுடன் குறித்த நிவாரண குழுக்கள் தற்போது பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வருகின்றது.
அதன்படி, நில்வலா ஆறு மற்றும் கிரம்பஆர பெருக்கெடுத்ததால், 2023 செப்டெம்பர் 30 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் டிங்கி மூலம் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கினர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையினர் தொடர்ந்தும் தயாராக உள்ளனர்.