காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது
காலி வக்வெல்ல பிரதேசத்தில் கிங் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2023 செப்டெம்பர் 29 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
சீரற்ற காலநிலையால் இலங்கைக்கு பெய்து வரும் கனமழை காரணமாக கிங் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட குப்பைகள், மரக்குற்றிகள், மூங்கில் புதர்கள் மற்றும் பிற குப்பைகள் வக்வெல்ல பாலத்தின் கீழ் சேகரிக்கப்பட்டு, ஆற்றின் நீரின் சீரான ஓட்டத்திற்கு இடையூறாக உள்ளது. இதை குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் பாலத்தின் அடியில் இருந்த அடைப்பை அகற்றி அப்பகுதியில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தவிர்த்துள்ளனர்.
இதன்படி, வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றுவதற்கும், தேவையான பணிகளை மேற்கொள்வதற்கும் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையுடன் தெற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட சுழியோடி மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டது. அதன் படி கடற்படையினரால் சீரான முறையில் தண்ணீரை வெளியேற்றிய பின் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தை தவிர்க்க முடிந்தது.