சுமார் 33 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் கரைநகர் தீவில் வைத்து கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் கரைநகர் தீவின் பூமட்டை கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 100 கிலோ கிராமுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா ஏற்றப்பட்ட டிங்கி படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் கரைநகர் தீவின் பூமட்டை கடற்கரை பகுதியில் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு, மூன்று (03) பைகளில் (ஈரமான எடை) நாற்பத்தொன்பது (49) பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் நூறு (100) கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) குறித்த படகு கைது செய்யப்பட்டது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதியின் மொத்த வீதி பெறுமதி முப்பத்து மூன்று (33) மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நூற்று (100) கிலோ எண்பத்தைந்து (85) கிராம் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.