கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட இந்திய நாட்டவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி
இலங்கைக்கு கிழக்குக் கடற்பகுதியில் MV Empress எனும் உல்லாசக் கப்பலில் பயணித்த போது திடீரென சுகவீனமடைந்த இந்திய நாட்டவர் ஒருவரை கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 29) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
‘MV Empress’என்ற பயணிகள் கப்பலில் இருந்த இந்திய நாட்டவர் ஒருவருக்கு அவசர சுகயீனம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை கரைக்குக் கொண்டு வருவதற்கு கடற்படை உதவி வேண்டும் எனவும் கடற்படை தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு குறித்த பயணிகள் கப்பல் செய்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை ஆபத்தான நிலையில் இருந்த இந்திய நாட்டவரை கரைக்கு கொண்டு வருவதற்காக கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட நான்காவது விரைவுப் தாக்குதல் படையணிக்கு சேர்ந்த பி 491 விரைவுத் தாக்குதல் படகு இந்த பயணிகள் கப்பல் இருந்த கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த இந்திய நாட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கடற்படையினரால் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.