வடகடலில் வைத்து சுமார் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம்,நெடுந்தீவு கடல் பகுதியில் 2023 ஆகஸ்ட் 22 ஆம் திகதி இலங்கைக் கடற்படையினர் நடத்திய ரோந்துப் பணியின் போது, 83 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, வடக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் ரணவிக்ரம மூலம் யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, கடற்படை நடவடிக்கைகள் காரணமாக அந்தக் கடற்பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 83 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா இருபத்தி இரண்டு பொதிகள் (22) (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி மதிப்பு 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது, மேலும் குறித்த கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.