யாழ்ப்பாணம் அரியாலை கடற்கரை பகுதியில் இருந்து 51 வர்த்தக வெடி பொருட்கள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2023 ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அரியாலை கடற்கரைப் பகுதியில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 வர்த்தக வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
வெடிமருந்துகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் கடற்படையினர் 2023 ஜூலை மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரியாலை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரை பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கவனித்து ஆய்வு செய்தனர். அப்போது, பையில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 வணிக வெடிபொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இந்த வணிக வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது, மேலும் இந்த வணிக வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.