557 கிலோ கிராமுக்கு அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 02 டிங்கி படகுகள் நீர்கொழும்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை மாதம் 18 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த களப்பு பகுதியூடாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐநூற்று ஐம்பத்தேழு (557) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றினர்.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, 2023 ஜூலை 18 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கெலணி நிறுவனத்தின் கடற்படையினர் நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நீர்கொழும்பு, தூவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு (02) டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டதுடன் குறித்த இரண்டு (02) படகுகளில் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பத்தொன்பது (19) பைகளில் பொதி செய்யப்பட்ட ஐந்நூற்று ஐம்பத்தேழு (557) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கைது செய்யப்பட்டது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐநூற்று ஐம்பத்தேழு (557) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அனுமதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.