கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் தம்பலகமுவ பகுதியில் கைது
திருகோணமலை, தம்பலகமுவ, மீரா நகர் பகுதியில் 2023 ஜூன் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இனைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடற்படை மற்ற சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் படி கடற்படைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரகும்பா, லங்காபடுன மற்றும் கோகன்ன நிருவனங்களின் கடற்படையனர் கந்தளே, சூரியபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இனைந்து 2023 ஜூன் 26 ஆம் திகதி தம்பலகமுவ, மீரா நகர் பகுதியில் விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். அங்கு, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட பார்சலில் (01) பொதி செய்யப்பட்ட 01 கிலோ 576 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் (02) 42 மற்றும் 52 வயதுடைய தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் இருவர் (02) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தம்பலகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.