தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் சிக்கிய கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு
காலி, பத்தேகம பகுதியில் கிங் கங்கை ஊடாக கட்டப்பட்ட தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2023 ஜூன் 12 ஆம் திகதி ஈடுபட்டனர்.
கனமழை காரணமாக, கிங் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், நீரில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள், மரக்கட்டைகள், மூங்கில் புதர்கள் உள்ளிட்ட கழிவுகள், தொடங்கொடை, அகலிய பாலங்களில் சிக்கி, படிப்படியாக நீரின் ஓட்டத்தைத் தடுக்கின்றது. இக் காரணத்தினால் அப்பகுதியில் வெள்ள அபாயத்தை தடுக்க கழிவுகளை அகற்றும் பணிகள் கடற்படையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023 ஜூன் 12 ஆம் திகதி தெற்கு கடற்படைக் கட்டளைக்கு இணைக்கப்பட்ட சுழியோடி மற்றும் விரைவு நடவடிக்கைப் படகுகள் படைப்பிரிவின் குழுவொன்று குறித்த பகுதிக்கி அனுப்பி தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கழிவு அகற்றும் நடவடிக்கைகளால் அந்த பகுதிகளில் வெள்ள அபாயத்தைத் தடுக்க முடிந்தது.