வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்
மோசமான வானிலை காரணமாக மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஜூன் 4 முதல் புலத்சிங்கள, பதுரலிய, லத்பந்துர மற்றும் கலவான ஆகிய இடங்களுக்கு கடற்படை நான்கு (04) நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. தற்போது நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனையடுத்து, களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய லத்பந்துர பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த பாடசாலை மாணவர்களின் குழுவிற்கு உதவ கடற்படை நிவாரணக் குழுக்கள் இன்று (ஜூன் 05) காலை நடவடிக்கை எடுத்தன. இதனால், க.பொ.த பரீட்சைக்கு பாடசாலைக்குச் செல்வதற்காக இருந்த மாணவர்களை ஏற்றிச் செல்ல கடற்படை படகுச் சேவையை வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கடற்படை நிவாரணக் குழுக்களால் தேவையான நிவாரண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.