திருகோணமலை மொல்லிப்பொத்தானையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து திருகோணமலை மொல்லிப்பொத்தானை பகுதியில் 2023 ஜூன் மாதம் 01 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கு (01) அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கோகன்ன நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பரகும்பா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை பொலிஸாருடன் இணைந்து 2023 ஜூன் 01 ஆம் திகதி திருகோணமலை மொலிப்பொத்தானை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனையிட்டனர். அங்கு, குறித்த நபர் விற்பனைக்காக கொண்டு சென்ற 01 கிலோ 90 கிராம் கேரளா கஞ்சாவுடன் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் மொத்த வீதி பெறுமதி சுமார் 627,000.00 ரூபா எனவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) தம்பலகமுவ பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த சந்தேகநபர் மற்றும் கஞ்சா பொதி தம்பலகமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.