சீரற்ற காலநிலையினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்
தீவை பாதித்துள்ள மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 மே 14 ஆம் திகதி தெற்கு மாகாணத்தில் சில பகுதிகளில் இலங்கை கடற்படையினர் நிவாரணக் குழுக்களை நிலைநிறுத்தியுள்ளனர்.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், அவசர வெள்ள சூழ்நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும், அவர்களை அனர்த்தத்திலிருந்து மீட்பதற்காகவும், தென் கடற்படைக் கட்டளையின் காலி, அகுரஸ்ஸ, கொடபொல, நாகொட, தவலம, கம்புருபிட்டிய மற்றும் அதுரலிய (01) ஆகிய பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்களை அனுப்பப்பட்டது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கிங்கங்கை மற்றும் நில்வலா கங்கை பெருக்கெடுத்துள்ளதால் வெள்ள நிலைமை காரணமாக அந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடற்படை நிவாரண குழுக்கள் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க தயாராக உள்ளனர்.
மேலும், தீவை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக வெள்ள அபாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவைக்கேற்ப கடற்படையின் கூடுதல் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.