சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேருடன் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது.
சட்டவிரோத குடியேற்றங்கள் உட்பட கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரை பிரதேசங்களில் கடற்படையினர் பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன் படி 2023 மே மாதம் 05 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகொன்றை கண்காணித்து சோதனை செய்தனர். அப்போது இந்த நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபருடன் வயதான இரண்டு (02) ஆண்கள், ஒரு (01) பெண் மற்றும் மூன்று (03) குழந்தைகள் உட்பட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாரு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளடைன் குறித்த சநதேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.