வடகடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 10 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் குதிரிப்பு, வெத்தலக்கேணி மற்றும் நாகர்கோவில் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர், சுழியோடி உபகரனங்கள், சுமார் 1040 கடல் அட்டைகள் மற்றும் ஐந்து (05) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெத்தலக்கேணி கடற்படை நிலையம் சிறிய கப்பல்களை அனுப்பி யாழ்ப்பாணம் குதிரிப்பு, வெத்தலகேணி மற்றும் நாகர்கோவில் கடற்பரப்புகளில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் குறித்த கடற்பகுதிகளில் கடல் அட்டைகள் பிடித்துக்கொன்டிருந்த (10) நபர்களுடன் சுழியோடி உபகரணங்கள், சுமார் 1040 கடல் அட்டைகள் மற்றும் ஐந்து (05) டிங்கி படகுகள் கைது செய்யப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் வங்காலே மற்றும் பல்லேமுனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் 22 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், சுழியோடி உபகரணங்கள், டிங்கி படகுகள் மற்றும் கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.