சுமார் 67.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது
தலைமன்னார் மணல்பாறையை அண்டிய கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்று (02 ஏப்ரல் 2023) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்து வந்த ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) 04 கிலோ (ஈரமான எடை). கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் உட்பட சட்டவிரோத கடத்தல்களை கட்டுபடுத்த கடற்படை பல ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னாவின் கடற்படையினர் தலைமன்னார், மணல்பாறைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் இன்று (ஏப்ரல் 02, 2023) மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடலில் மிதந்து வந்த சாக்கு மூட்யோன்றை கண்காணித்து ஆய்வு செய்தனர். அப்போது குறித்த சாக்கு மூட்டையில் நான்கு (04) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 04 கிலோ 500 கிராம் (ஈரமான எடை) ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) கைப்பற்றப்பட்டது.
குறித்த பகுதியில் கடற்படையினரின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை கரைக்கு கொண்டு வர முடியாமல் கைவிட்டு சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். இந்த ஐஸ் போதைப்பொருளின் (Crystal Methamphetamine) வீதி பெறுமதி 67.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது. . மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.