யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பகுதியில் 04 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம், சங்குப்பிட்டி வீதித் தடுப்பில் 2023 மார்ச் மாதம் 01ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 04 கிலோ கிராம் கொண்ட இரண்டு (02) கேரள கஞ்சா பார்சல்களை பஸ் வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் புனகரி பொலிஸார் இணைந்து 2023 மார்ச் மாதம் 1 ஆம் திகதி மாலை சங்குப்பிட்டி வீதித்தடைக்கு அருகில் நடத்திய இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பஸ் வண்டியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த நபர் ஒருவர் சோதனையிடப்பட்டார். அவரை சோதனை செய்த போது நான்கு (04) கிலோ கேரள கஞ்சா அடங்கிய இரண்டு (02) பார்சல்களுடன் குறித்த சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.
இதன்படி, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி ஒரு மில்லியன் (01) ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) யாழ்ப்பாணம், அனலத்தீவைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புனகரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.