கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன.
கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலக் கூட்டத்தை பாதுகாப்பாக விடுவிக்க இன்று (2023 பிப்ரவரி 11) இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர்.
அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினரால் இன்று (2023 பிப்ரவரி 11) காலை கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் பதினான்கு (14) திமிங்கலங்கள் அடங்கிய கூட்டமொன்று அவதானிக்கப்பட்டது பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்தத கடற்படையினர் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் திமிங்கலங்கள் கடலுக்கு திருப்பி அனுப்பப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாரு கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் மூன்று (03) திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த திமிங்கலங்கள் ‘Short–Finned Pilot Whale வகையின் திமிங்கலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.