சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 989 கிலோகிராம் உலர் மஞ்சள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் 2023 ஜனவரி 19 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 989 கிலோகிராம் (ஈரமான எடை) உலர்ந்த மஞ்சளுடன் நாங்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஞ்சதேவ நிருவனம் மூலம் கடலோர ரோந்து கப்பலொன்று பயன்படுத்தி 2023 ஜனவரி 19 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை அவதானித்து சோதனை செய்தனர். அங்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 14 சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட 496 கிலோ 054 கிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரு சந்தேகநபர்கள் மற்றும் குறித்த டிங்கி படகு கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்களால் (01) கடலில் வீசப்பட்ட சுமார் 48 கிலோ 030 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள உலர் மஞ்சள் சாக்கு மூட்டையொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் 2023 ஜனவரி 19 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படைக் கப்பல் வேலுசுமண நிருவனத்துடன் இணைக்கப்பட்ட மரையின் படையணியின் வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டதுடன் அங்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 12 சாக்குகளில் பொதி செய்யப்பட்ட உலர் மஞ்சள் 445 கிலோ மற்றும் 800 கிராம் (ஈரமான எடை) உடன் இரண்டு (02) சந்தேகநபர்களும் குறித்த டிங்கி படகும் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 33 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளதுடன் குறித்த நான்கு (04) சந்தேகநபர்களும் 989 கிலோகிராம் 884 கிராம் (ஈரமான எடை) உலர் மஞ்சளும் இரண்டு டிங்கி படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.