சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதுக்காக பணம் எடுத்த 02 சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 ஜனவரி 04 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வெளியேற்றி அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறி பணம் பெற்ற மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நீர்கொழும்பு பொலிஸாருடன் இணைந்து நீர்கொழும்பு பகுதியில் 2023 ஜனவரி 04 ஆம் திகதி மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான காரொன்று சோதனையிடப்பட்டதுடன் அங்கு, இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மக்களைக் வெளியேற்றுவதாகக் கூறி இருபது (20) பேரிடம் ஐந்து (05) மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்ட மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு (02) நபர்களுடன் குறித்த கார் வண்டி கைது செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 41 வயதுடைய சிலாபம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள் (02) மற்றும் கார் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இவ்வாரான மனித கடத்தல்களில் சிக்கி உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.