சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த 4000 கிலோவுக்கும் அதிகமான பிடி இலைகள் கொண்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் வடமேற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன
இலங்கை கடற்படையினரால் 2022 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 4000 கிலோ கிராமுக்கும் அதிகமான பிடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் எட்டு இந்தியர்கள் (08) கைது செய்யப்பட்டனர்.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில மூலம் 2022 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு வடமேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கல்பிட்டி, குதிரைமலை முனை பகுதியூடாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த சந்தேகத்திற்குரிய இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகள் கவனிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு, 128 பார்சல்களில் அடைத்து சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 4000 கிலோவுக்கும் அதிகமான பிடி இலைகளுடன் இரண்டு இந்திய மீன்பிடி படகுகளும், எட்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகள், பிடி இலைகள் மற்றும் எட்டு (08) இந்திய சந்தேகநபர்கள் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மேலும், 2022ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த 15000 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறான கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து இலங்கை கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.