12 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது
இன்று (2022 நவம்பர் 14) அதிகாலை யாழ்ப்பாணம், கல்முனை முனைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 41 (ஈரமான ஏடை) கிலோ கிராமுக்கும் அதிகமான எடையுள்ள கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் கடற்படையினரால் யாழ்ப்பாணம் கல்முனை முனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டது. அங்கு 19 பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 41 கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் டிங்கி படகொன்று கைப்பற்றப்பட்டது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் வீதி பெறுமதி 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய சந்தேகநபர் (01) யாழ்ப்பாணம் மொனரப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புனரீன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.