தொட்டலங்க பகுதியில் ஏற்பட்ட அவசர தீயை அணைக்க கடற்படையின் உதவி
தொட்டலங்க கஜிமாவத்த பகுதியில் 2022 செப்டெம்பர் 27 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதற்கும் தீ பரவாமல் தடுப்பதற்கும் இரண்டு (02) கடற்படை தீயணைப்பு குழுகள் உதவினர்.
கஜிமாவத்தை பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயை அணைத்து, சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க கடற்படை தீயணைப்பு குழுவின் உதவி வழங்குமாரு கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு 2022 செப்டம்பர் 27 ஆம் திகதி இரவு மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையிடம் உதவி கோரியது.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் அறிவுறுத்தலின் பேரில், உடனடியாகப் பதிலளித்த கடற்படையினர் இலங்கை கடற்படைக் கப்பல் ரங்கல மற்றும் கெமுனு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட இரண்டு (02) தீயணைப்புக் குழுக்கள் மற்றும் இரண்டு (02) தண்ணீர் பவுசர்கள் தொட்டலங்க கஜிமாவத்த பகுதிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் ஏனைய தீயணைப்பு குழுக்களுடன் இனைந்து கடற்படையின் தீயணைப்பு குழுவினர் பிரதேசவாசிகளின் ஆதரவுடன் தொட்டலங்க கஜிமாவத்த பகுதியிலுள்ள சிறிய வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுப்படுத்தியுள்ளனர்.
மேலும், நாட்டில் எந்தவொரு அவசர நிலையிலும் பொதுமக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.