சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 44 பேர் கடற்படையினரால் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு, வலைத்தோட்டம் கடற்பரப்பில் 2022 ஆகஸ்ட் 28 ஆம் திகதி இரவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படைக்கு சொந்தமான P 465 மற்றும் P 4443 விரைவுத் தாக்குதல் கப்பல்கள் 2022 ஆகஸ்ட் 28 இரவு திருகோணமலை கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
குறித்த விசேட நடவடிக்கையின் போது திருகோணமலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த இலங்கையின் பல நாள் மீன்பிடிப் படகொன்று P465 விரைவுத் தாக்குதல் கப்பல் மூலம் கண்டரியப்பட்டது. அப்போது இந்த நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடுகளுக்கு குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 18 வயதுக்கு மேற்பட்ட 25 ஆண்கள், 02 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட இருவருடன் 29 பேர் குறித்த பலநாள் மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி P 465 துரித தாக்குதல் கப்பல் மூலம் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலுக்கு நிலத்திலிருந்து நபர்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் குச்சவேலியைச் சேர்ந்த இருவர் (02) மற்றும் டிங்கி படகு ஒன்று 28 ஆகஸ்ட் 2022 ஆம் திகதி இரவு குச்சவெளி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் வலகம்பா நிறுவனத்தின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பி4443 வேகத் தாக்குதல் கப்பலின் கடற்படையினர் அதே கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மற்றொரு இலங்கையைச் சேர்ந்த பல நாள் மீன்பிடிக் கப்பலை சோதனையிட்டனர். அங்கு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட 05 ஆண்கள் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், P4443 என்ற வேகத் தாக்குதல் கப்பலின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து குடியேறத் தயாராகி வருவதாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட 10 ஆண்கள். லங்காபடுன வாளந்தோட்டம் கடற்கரையில் தங்கியிருந்த போது கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் லங்காபடுன நிருகனத்தின் கடற்படையினரால் 2022 ஆகஸ்ட் 28 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, வாழைச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் குச்சவேளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், P465 மற்றும் P4443 விரைவுத் தாக்குதல் படகுகள் மூலம் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட முப்பத்து நான்கு நபர்கள் (34) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடமும் இலங்கை கடற்படைக் கப்பல் வலகம்பா நிருவனத்தின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இருவர் (02) குச்சவெளி பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட உள்ளனர். இலங்கை கடற்படைக் கப்பல் லங்காபடுன நிருவனத்தின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பத்து (10) பேரையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு ஈச்சலம்பத்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்களால் நடத்தப்படும் மனித கடத்தலில் சிக்கி, இந்த நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பதன் மூலம், தங்கள் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.