வெற்றிகரமாக பயிற்சியை பூர்த்தி செய்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றும் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் பயிற்சி பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது (தொழில்நுட்ப) மற்றும் 36வது ஆட்சேர்ப்பின் சேர்ந்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறும் நிகழ்வு 2022 ஜூலை 22 ஆம் திகதி திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
இதன்படி, வெற்றிகரமாக பயிற்சியை பூர்த்தி செய்த ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது ஆட்சேர்ப்பின் தொழில்நுட்பப் பிரிவின் 11 நடுநிலை அதிகாரிகளும், 36வது ஆட்சேர்ப்பின் 25 நடுநிலை அதிகாரிகளும் கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் இடம்பெற்ற அதிகாரமளிக்கும் நிகழ்வின் போது அவர்களின் பெற்றோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் வெளியேறி சென்றனர்.
பயிற்சிக் காலத்தில் சிறந்த செயற்பாட்டை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் விசேட விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35 ஆவது ஆட்சேர்ப்பு தொழில்நுட்பப் பிரிவில் சிறந்த நடுநிலை அதிகாரிக்கான விருதை நடுநிலை அதிகாரி எச்.ஏ.எஸ்.வி ஹப்புஆராச்சி பெற்றார்.
மேலும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36 ஆவது ஆட்சேர்ப்பில் சிறந்த நடுநிலை அதிகாரிக்கான வாள் மற்றும் விருதினை நடுநிலை அதிகாரி ஐ.எஸ்.வீரசிங்க பெற்றுள்ளதுடன் தொழில்சார் பாடங்களில் மற்றும் சகல பாடங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற நடுநிலை அதிகாரியாக எஸ்.என். அபேவர்ண விருதினை பெற்றுள்ளார். மேலும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருதை நடுநிலை அதிகாரி ஆர்.பி.பி.எஸ். ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார்.
அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளை உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பாரம்பரிய கடற்படை மரபுகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட இத்தகைய அற்புதமான கடற்படை அணிவகுப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, புதிதாக நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிகளை இலங்கை பாதுகாப்புப் படைகளின் பெருமைமிக்க குடும்பத்தில் வரவேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான மூன்று தசாப்தகால யுத்தத்தின் போது கடற்படையின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பாதுகாப்பு செயலாளர், புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்களின் முன்னோர்களின் சிறப்பை நிலைநிறுத்தக்கூடியவாறு சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்திய அதேவேளை தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்கும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடு எதிர்கொள்ளும் பாரம்பரியமற்ற சவால்களான ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், பிற நாடுகடந்த குற்றங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற பல அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கும் செயலாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் கடற்படை வீரர்கள் மனித கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சர்வதேச குற்றங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற இந்து சமுத்திரத்தில் நாடு எதிர்நோக்கும் பாரம்பரியமற்ற கடல்சார் சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு தங்களை அர்ப்பணித்ததைப் போலவே, புதிய அதிகாரிகளின் அர்ப்பணிப்பு தாய்நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் தாய்நாட்டிற்கு சேவை செய்ய இலங்கை கடற்படையில் இணைந்து கொள்வதில் மிகுந்த பெருமை கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன், வெளியேறும் அதிகாரிகள் தமது தொழில் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மேலதிக பயிற்சி வாய்ப்புகளை எதிர்பார்த்து தமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் இலங்கை கடற்படையை வழிநடத்தக்கூடிய முதிர்ந்த அதிகாரிகளாக மாறுவார்கள் எனவும் அர்ப்பணிப்புடன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடான இலங்கை, நாட்டின் வருமானத்தில் கணிசமான பகுதியை நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியாக ஒதுக்கி வருகின்றதுடன், இராணுவத்தினரால் வழங்கப்படும் அரசாங்க வளங்களைப் பயன்படுத்தி, எல்லையற்ற விசுவாசத்துடனும் நேர்மையுடனும் கடற்படை அதிகாரியாக நாட்டுக்காக கடமையாற்ற வேண்டும் என்றும் கடற்படை சிக்கனமாகவும் எதிர்காலத்திற்காகவும், வளங்கள் பாதுகாக்கப்படுவதையும், அவற்றை முறையாகப் பயன்படுத்துவதையும் உறுதிசெய்து, நீண்ட காலத்திற்கு அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் விரும்பிய முடிவை அடைய வேண்டும் என்றும் கூறினார்.
நாட்டின் இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான சவால் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், மிகச் சரியான முடிவை எடுப்பதற்கு தமது பிள்ளைகளுக்கு முறையான வழிகாட்டுதலை வழங்கிய அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் பெற்றோருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். குழந்தைகள் எடுக்கும் முடிவைப் பற்றி பெற்றோர்கள் பெருமைப்பட வேண்டும் என்றும் கூறினார்.
“தேசத்தின் மீதான உங்கள் விசுவாசம் ஒருபோதும் கேள்விக்குட்படுத்தப்பட க்கூடாது, மேலும் சிவில் மற்றும் கடற்படை சட்டத்திற்கு கீழ்ப்படிந்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதித்து செயலாற்றுவது கட்டாயமாகும் " என அவர் மேலும் குறிப்பிட்டார். இறுதியாக,இந்த அதிகாரிகளை வடிவமைத்த கடற்படைத் தளபதி மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன, கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன, கடற்படை பிரதம அதிகாரி மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க, பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹாவிதான, பணிப்பாளர் நாயகம் (வரவுசெலவு மற்றும் நிதி) ரியர் அட்மிரல் திலக் சிகேரா, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் சுஜீவ செனவிரத்ன, பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் மஹிந்த மஹவத்த, வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும, கடற்படை சேவை வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் டாமியன் பெர்னாண்டோ உட்பட கொடி நிலை அதிகாரிகள், கடற்படை தலைமையகத்தின் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் குழு, முப்படை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெற்றோர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடற்படை கலாசார குழுவினால் நடத்தப்பட்ட அற்புதமான கலாசார நிகழ்ச்சி மற்றும் கடற்படை இசைக்குழுவின் கலைநிகழ்ச்சியின் பின்னர், கடற்படை மரபுகளுக்கமைய ஹிரு அஸ்தவிய சடங்குகளுடன் இந் நிகழ்வு நிறைவடைந்துள்ளது.