சுமார் 172 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், காரைநகர் பழைய கசூரினா கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் 2022 ஜூலை 19 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான டிங்கி படகு ஒன்று சோதனை செய்யப்பட்டதுடன் 575 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா குறித்த டிங்கி படகில் இருந்து (ஈரமான எடை) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதனுடன் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2022 ஜூலை 19 ஆம் திகதி இரவு, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கரையோர ரோந்துக் கப்பல்களான P157, P013 மற்றும் P018 யாழ்ப்பாணம் காரைநகர் பழைய கசுரினா கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அங்கு சந்தேகத்திற்கிடமான படகொன்றை கண்காணித்து சோதனையிட்ட போது, 17 பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்த 575 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) குறித்த டிங்கி மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 172 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 51 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி பட்கு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.