வத்தளை ஹுனுபிட்டிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி
வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் உள்ள இரும்பு சேகரிப்பு நிலையமொன்றில் 2022 ஜூலை 16 ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபடுகின்றனர்.
வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் உள்ள இரும்பு சேகரிப்பு நிலையமொன்றில் தீ பரவி வருவதாகவும், குறித்த தீயை அணைக்க கடற்படையின் உதவி தேவை என்றும் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தினால் 2022 ஜூலை 16 ஆம் திகதி பிற்பகல் வெலிசர இலங்கை கடற்படை கப்பல் நிருவனத்தின் செயல்பாட்டு அறைக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, உதவிக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை, இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தின் தீயணைப்பு குழவொன்று, தீயணைப்பு வாகனம் மற்றும் தண்ணீர் பவுசர் ஆகியவை தீயை கட்டுப்படுத்துவதற்காக வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் உள்ள இரும்பு சேகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். கடற்படையினரின் பெரும் முயற்சியால் பிரதேசவாசிகளின் உதவியுடன் இன்று (2022 மார்ச் 28) காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும், எந்தவொரு அவசர நிலையிலும் பொதுமக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.