சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 67 பேர் கடற்படையினரால் கைது
கல்முனை கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூலை 08) அதிகாலை மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 67 பேர் மீன்பிடி படகொன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இலங்கை கடற்படைக் கப்பல் ரணரிசியின் கடற்படையினர் இன்று (2022 ஜூலை 08) அதிகாலை கல்முனை கடற்பகுதியில் பயணித்த சந்தேகத்திற்குரிய பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றை பரிசோதித்தனர். அப்போது பல நாள் மீன்பிடி கப்பல் மூலம் சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 ஆட்கடத்தல்காரர்கள் உட்பட 53 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 08 சிறுவர்கள் உட்பட 67 பேர் குறித்த மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாரு கைது செய்யப்பட்டவர்கள் 01 முதல் 56 வயதுக்குட்பட்ட மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மேலும், பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்களால் நடத்தப்படும் மனித கடத்தலில் சிக்கி, இந்த நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பதன் மூலம், தங்கள் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.