சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் 04 சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் குருநகரில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்
இலங்கை கடற்படையினர் 2022 மே 05 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தயாரிக்கப்பட்ட 07 வெடிபொருட்களுடன் நான்கு (04) சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கடற்றொழில் சமூகத்தைச் சேர்ந்த மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடித் தொழிலின் காரணமாக கடல்சார் சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தீவை சுற்றியுள்ள கரையோர பகுதிகளில் கடற்படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் விசேட கடற்படைக் குழுவொன்று 2022 மே 05 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கை யொன்றை மேற்கொண்டதுடன் அப்போது அவர்களால் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனையிடப்பட்டது. குறித்த டிங்கி படகில் இருந்து சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தயாரிக்கப்பட்ட 07 வெடிபொருட்கள், 08 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் மற்றும் பல சுழியோடி உபகரணங்களுடன் நான்கு சந்தேக நபர்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 42 வயதுடைய யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், வெடிபொருட்கள், நீர்மூழ்கிக் கருவிகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோன்று, கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிருவனத்தின் கடற்படையினர் 2022 மே 01 அன்று திருகோணமலை ஜமாலியா கடற்கரையில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, மீன்பிடி சாதனங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் 02 பாதுகாப்பு உருகிகளை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பொருட்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கடல் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான அடியை ஏற்படுத்தும் வெடிபொருட்களுடன் தொடர்புடைய இதுபோன்ற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளது.