வத்தளை, எலகந்த பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கடற்படையினரின் உதவி
வத்தளை, எலகந்த பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று (03) துணிக்கடைகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த கடற்படையினர் இன்று (2022 மே 06) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வத்தளை எலகந்த எலபட தோட்டப் பகுதியிலுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று (03) துணிக் கடைகள் தீப்பிடித்துள்ளதுடன், தீயை அணைப்பதற்கும் அதனைத் தடுப்பதற்கும் கடற்படையின் தீயணைப்புப் பிரிவினரின் உதவியை கோரி வத்தளை பொலிஸார் வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தின் செயற்பாட்டு அறைக்கு இன்று காலை (2022 மே 06) அறிவித்துள்ளது.
அதன் படி, இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட கடற்படையினர், இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தின் தீயணைப்பு பிரிவினரையும், தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது. இதனையடுத்து, கடற்படை தீயணைப்பு வீரர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைத்ததன் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
மேலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.