சுமார் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா வடக்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர் 2022 மே 03 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் சவுக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 492 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் டிங்கி படகு ஒன்றையும் கைது செய்தனர்.
கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையுடன் இனைக்கப்பட்ட கடலோர காவல்படை படகொன்றின் கடற்படையினர் யாழ்ப்பாணம், சவுக்காடு கடற்பகுதியில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அவதானித்து சோதனையிட்டனர் அப்போது குறித்த டிங்கி படகிற்குள் 15 பைகளில் 225 பொதிகளாக பொதி செய்யப்பட்ட 492 கிலோகிராம் கேரள கஞ்சாயுடன் ஒரு சந்தேகநபரையும் குறித்த டிங்கி படகையும் கைது செய்துள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி பெறுமதி ரூ. 123 மில்லியனுக்கும் மேல் என நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபர், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.