நயாறு கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் உட்பட பல வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
நாயாறு கடற்பகுதியில் 2022 ஏப்ரல் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மிதவையின் மூலம் கடற்பரப்பில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 வாட்டர் ஜெல் குச்சிகள் உட்பட பல வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டனர்.
கடற்றொழில் சமூகத்தைச் சேர்ந்த மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித் தொழிலின் காரணமாக கடல்சார் சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தீவை சுற்றியுள்ள கரையோர பகுதிகளில் கடற்படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கோட்டாபய நிறுவனத்தின் கடற்படையினர் 2022 ஏப்ரல் 26 ஆம் திகதி முல்லைத்தீவு நயாறு கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்ட போது ஒரு மிதவையின் ஆதாரத்தில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 வாட்டர் ஜெல் குச்சிகள் (Water Gel), 02 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் மற்றும் 06 அங்குல நீளமுள்ள பாதுகாப்பு உருகியொன்று கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்துவதற்காக இந்த வெடிபொருட்கள் கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெடிபொருட்கள் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.