75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்படையினர் இன்று (31 மார்ச் 2022) நீர்கொழும்பு, துவ களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 249 கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். மெலும், இந்த நடவடிக்கையின் மூலம் சிறிய கார் ஒன்று மற்றும் மோசடியில் ஈடுபட்ட 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க, கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் களனி நிறுவனத்தின் வீரர்கள் மற்றும் குறித்த கட்டளைக்கு உட்பட்ட மரைன் படைப் பிரிவின் வீர்ர்கள் இன்று (31 மார்ச் 2022) நீர்கொழும்பு துவ களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிறிய காரில் கொண்டு செல்வதற்காக தயார் செய்யப்பட்ட 110 பார்சல்களில் அடைக்கப்பட்ட 249 கிலோகிராம் 900 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு சிறிய கார் கைது செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி மதிப்பு சுமார் 75 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பேசாலை பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 47 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், கேரளா கஞ்சா மற்றும் கார் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வலான பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.