பொல்பித்திகம, மாஎலிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி
பொல்பிதிகம மாஎலிய பிரதேசத்தில் உள்ள திகிலிய மலை வனச்சரகத்தில் 2022 மார்ச் 27 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது (2022 மார்ச் 28) தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படை தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பொல்பித்திகம, மாஎலிய பகுதியில் உள்ள திகிலிய மலை வனச்சரகத்தில் தீ பரவி வருவதாகவும், குறித்த தீயை அணைக்க கடற்படையின் உதவி தேவை என்றும் 2022 மார்ச் 27 ஆம் திகதி இரவு பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தினால் வடமேல் கடற்படை கட்டளைத் தளபதிக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, உதவிக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை, வடமேற்கு கடற்படை கட்டளையின் மஹவ முகாமின் கடற்படையினர் குழவொன்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிருவனத்திக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தையும் தீயை கட்டுப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி இரவு பொல்பித்திகம, மாஎலிய பகுதியில் உள்ள திகிலிய மலை வனச்சரகத்துக்கு அனுப்பி வைத்தனர். கடற்படையினரின் பெரும் முயற்சியால் இன்று (2022 மார்ச் 28) காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இன்று (2022 மார்ச் 28) மாலை பிரதேசத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மீண்டும் சிறு தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை அணைக்க கடற்படை குழுவொன்று பிரதேசத்தில் நிலைகொண்டுள்ளதுடன் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.