வணிக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது
திருகோணமலை இரணைகேணி பகுதியில் 2022 மார்ச் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 20 வாட்டர் ஜெல் குச்சிகள் (Water Gel) மற்றும் 25 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் ஆகியவையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் (STF) இணைந்து 2022 மார்ச் 21 ஆம் திகதி திருகோணமலை இரணகேணி பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 20 நீர் ஜெல் குச்சிகள் (Water Gel) மற்றும் 25 மின்சாரமற்ற டெட்டனேட்டர்களுடன் ஒரு சந்தேகநபர் மற்றும் மோட்டார் சைக்கிள் கைது செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்துவதற்காக இந்த வெடிபொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மீனவ சமூகத்தினரால் வெடி பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடித் தொழிலின் காரணமாக கடல் சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.