பருத்தித்துறையில் கடற்படையினரால் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
பருத்தித்துறை, நெல்லியடி பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 817 கிராம் ஐஸ் ரக போதை பொருள் கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் (Crystal Methamphetamine) கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்த கடற்படை பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளின் கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2022 பெப்ரவரி 14 அன்று பருத்தித்துறை நெல்லியடி பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றை சோதனையிட்ட போது, கடத்தி வரப்பட்ட சுமார் 817 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் 6.5 மில்லியன் ரூபா பெருமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பருத்தித்துறை மற்றும் குடத்தேனி பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.