கடலில் பாதிக்கப்பட்ட இலங்கை மீன்பிடி படகில் இருந்த மீனவர்களை மீட்க கடற்படையினரின் உதவி
இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட 'அசேல புதா II' என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து (05) மீனவர்களை கடற்படையின் ஒருங்கிணைப்பில் MV PGC Periklis (IMO 9796171) என்ற வெளிநாட்டு கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் அவர்களை சிகிச்சைக்காக இன்று (2022 ஜனவரி 08) காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2021 நவம்பர் 04 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆறு (06) மீனவர்களை ஏற்றிச் சென்ற 'அசேல புதா II' (பதிவு எண். IMUL-A-0635 KLT) என்ற பல நாள் மீன்பிடிக் பட்கு தொடர்பாக 2022 ஜனவரி 01க்குப் பிறகு எந்தத் தகவலும் கிடைக்காததால், இந்த படகுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டுள்ளதா என்று தேடி பார்க்க பேருவளை பொலிஸார் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் 2022 ஜனவரி 4 மற்றும் 5 திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் உதவிகள் (MRCC) கோரினர். குறித்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், காணாமல் போன இலங்கையின் பல நாள் மீன்பிடிபடகைக் கண்காணிக்க இந்தியா மற்றும் மாலத்தீவில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுக்கு தெரிவித்தனர்.
அதன்படி, இலங்கைக்கு தென்மேற்கே மாலத்தீவு கடல் பகுதி ஊடாக இந்தியாவின் போர்ட் பிளேயார் (Port Blair) துறைமுத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்த MV PGC Periklis (IMO 9796171) என்ற கப்பலின் கேப்டன் 2022 ஜனவரி 07 ஆம் திகதி காலிக்கு தென்மேற்கே 332 கடல் மைல் (சுமார் 614 கி.மீ) தொலைவில் மாலத்தீவு கடற்பரப்பில் சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட 'அசேல புதா II' என்ற பல நாள் படகில் பயணித்த ஐந்து மீனவர்களை மிட்டதாகவும் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தெரிவித்தார். மேலும் கப்பலில் மீட்கப்பட்ட 5 மீனவர்களை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கப்பலின் கேப்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, MV PGC Periklis (IMO 9796171) மூலம் மீட்கப்பட்ட மீனவர்களை இன்று (2022 ஜனவரி 08) காலி துறைமுகத்திற்கு அருகில் கொண்டு வரப்பட்டதுடன் தென் கடற்படைக் கட்டளையின் P107 கடலோரக் காவல்படை படகு மூலம் தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க அவர்களை கரைக்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அவர்களை காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், 'அசேல புதா II' என்ற பல நாள் மீன்பிடிக் படகின் விபத்தினால் காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்கு மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைத் தலைமையகத்தின் கடல்சார் சேவைகள் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மாலைதீவு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், மீட்கப்பட்ட மீனவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் MV PGC Periklis கப்பலின் கேப்டனும் இது தொடர்பாக மாலைதீவு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் அளித்துள்ளதாக தெரியவந்தது.
கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடலில் எதிர்பாராத ஆபத்துக்களால் பாதிக்கப்படும் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகளை மேலும் ஒருங்கிணைக்க எப்போதும் விழிப்புடன் மற்றும் உறுதியுடன் உள்ளது.